Chennai

News March 21, 2024

சென்னையில் IT சோதனை

image

சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. நீலாங்கரையில் பாலா என்பவரது வீட்டிலும், கேஸினோ டிரைவ், ப்ளூ பீச் சாலை மற்றும் அண்ணா நகர் அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 21, 2024

சென்னை: 4 பேர் வேட்பு மனு தாக்கல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று(மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்நாளில் சென்னையில் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். டெபாசிட் தொகையாக பொது பிரிவினருக்கு ரூ.25 ஆயிரமும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,500 செலுத்த வேண்டும்.

News March 20, 2024

சென்னை வாசிகளே..அந்தப் பக்கம் போகாதீங்க

image

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை என சென்னை மாநகர போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

News March 20, 2024

மத்திய சென்னை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு மத்திய சென்னை உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News March 20, 2024

சென்னை: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வடசென்னை மக்களவை தொகுதிக்கு கலாநிதி வீராசாமி, தென் சென்னைக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னைக்கு தயாநிதிமாறன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

சென்னை வடக்கு, தெற்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சென்னை தெற்கு தொகுதியில் ஜெயவர்தன், வடக்கு தொகுதியில் மனோகர் போட்டியிடுகின்றனர்.

News March 20, 2024

சென்னை: 7 நாளில் 60 பேர் கைது!

image

பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் கடந்த மார்ச் 12ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை 7 நாளில் போதைப்பொருள் விற்றதாக 34 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, 364 போதை மாத்திரைகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 20, 2024

‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

சென்னையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

image

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யபட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News March 19, 2024

சென்னை: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!