Chennai

News April 1, 2025

கோர விபத்தில் 3 பேர் பலி

image

செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அப்போது, மற்றொரு டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில், கார் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்தனர்.

News March 31, 2025

JUST NOW: சென்னையில் இளைஞர் வெட்டி கொலை

image

சென்னை பெரவள்ளூரில் சந்துரு என்ற இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரோடு மது அருந்தி விட்டு வந்தவரை, ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும், கொலையில் தொடர்பு இருப்பதாக வினோத் உள்ளிட்ட இருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

வீட்டில் செல்வம் பெருக செய்யும் அற்புத கோயில்

image

சென்னை வடதிருமுல்லைவாயலில் மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தலத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்தால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்ப நலம், உடல் நலம், செல்வம் பெருக பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். மேலும், இந்த காரியம் அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பணப்பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 31, 2025

வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை

image

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனக் கூறி, மனு தாக்கல் செய்தவருக்கும் ரூ.12,000 இழப்பீடாக வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 31, 2025

83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்

image

சென்னை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் நீர்வழிப்பாதைகள், நடைபாதைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது. மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றபட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

வழக்கறிஞர் வெட்டிக் கொலை

image

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் நேற்று (மார்.30) வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம்? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

SC, ST இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலை படிப்பு முடித்த 21 முதல் 25 வயது வரை உள்ள எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!