Chennai

News March 24, 2024

வாக்களிப்பதன் அவசியம் என்ன? – உறுதிமொழி ஏற்ற மாணவிகள்!

image

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

வளசரவாக்கம் குடிநீர் குழாய் உடைப்பு – பொதுமக்கள் அவதி

image

சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது . சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கின.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மத்திய சென்னையில் மருத்துவர் இரா.கார்த்திகேயன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2024

தென்சென்னை அதிமுக வேட்பாளர் மீது வழக்கு

image

வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முறையான அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது தரமணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 23, 2024

சென்னையில் மர்ம பொருள் வெடிப்பு: பீதியில் மக்கள்

image

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்ய பிரணவ் என்ற பிளஸ் டூ மாணவர் நேற்று முன்தினம் வேதிப்பொருள்களை பயன்படுத்திய போது வெடி விபத்து ஏற்ப்பட்டது. இதில் அந்த மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

News March 23, 2024

கஞ்சி குடிக்கும்போது பல் செட்டை விழுங்கிய மூதாட்டி

image

சென்னையில் நோன்பு கஞ்சி குடிக்கும்போது பல் செட்டையும் சேர்த்து மூதாட்டி ஒருவர் விழுங்கியுள்ளார். உடனே மூதாட்டியின் உறவினர்கள் அருகிலுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். நேற்று மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பல் செட்டை வெளியே எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர் .

News March 23, 2024

சென்னை: ஆட்டோ டிரைவர் கைது!

image

திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 2வது தெருவில் வசித்து வருபவர் பெருமாள்(58) ஆட்டோ ஓட்டுனர். இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இன்று வீட்டில் சோதனை செய்த போது ஹன்ஸ் 290, கூல் லிப், வி1 180 பாக்கு, உள்ளிட்ட வகைகளை பறிமுதல் செய்து இதை வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2024

சென்னையில் போலீஸ் குவிப்பு

image

17வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 350 போக்குவரத்து காவல் துறையினர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் உள்ளனர்.

News March 22, 2024

சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

image

சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 22, 2024

மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

image

தேமுதிக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பார்த்தசாரதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!