Chennai

News March 25, 2024

1950 -ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

image

18 ஆவது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு பொதுமக்கள் 1950 வை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,
மாநகராட்சி உதவி எண் 1913 யையும் தொடர்பு கொள்ளலாம்.

News March 25, 2024

சென்னையில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி

image

ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. தகுதிச் சுற்று போட்டி மே.21 இல் அகமதாபாத்திலும், இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த தமிழச்சி தங்க பாண்டியன்

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் அடையாறு – பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த தமிழிசை சௌந்தரராஜன்

image

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கரு.நாகராஜன் உடனிருந்தார்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

image

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னை ஜெயவர்தன், வடசென்னை ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

image

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம்

image

வண்ணாரப்பேட்டை, மண்டலம்-5 பேசின் பிரிட்ஜ் சாலையில் மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மு.அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு, வேட்பாளர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் வந்ததையடுத்து, இரு தரப்புக்கும் இடையே முதலில் வந்தது யார் என்பது குறித்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

புழல் பகுதியில் இப்தார் நிகழ்ச்சி

image

சென்னை மாநகராட்சி, 24வது வார்டிற்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நேற்று(மார்ச் 24) நடைபெற்றது. அப்பகுதியில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சியில், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

News March 24, 2024

சென்னை சாலையில் திடீர் வெள்ளம்?

image

சென்னை: போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

error: Content is protected !!