Chennai

News March 28, 2024

சென்னை: மதுபான விடுதி விபத்து: 2 பேர் பலி?

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட விபத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 28, 2024

சென்னையில் கொளுத்தும் வெயில்

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பினை பொறுத்தவர, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 28, 2024

கே.கே.நகர் அருகே ரூ.7 லட்சம் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

News March 27, 2024

சென்னை: திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

image

எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த வட திருச்செந்தூர் திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

தள்ளு வண்டி கடையில் வடை சாப்பிட்ட தமிழிசை

image

தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கேயம்பேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தள்ளுவண்டி கடை ஒன்றில் வடை சாப்பிட்டு, பணத்தை செல்போனில் அனுப்பினார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்னதாக பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருந்த நிலையில், தற்போது சிறிய கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாக தெரிவித்தார்.

News March 27, 2024

சென்னை: வீடு வீடாக அதிமுக வாக்கு சேகரிப்பு

image

திருவொற்றியூர் பகுதி ஏழாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சரவணா நகர் மற்றும் ஆர்.எம்.வீ நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் அவர்கள் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் உடன் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News March 27, 2024

வேட்பு மனு தாக்கல் செய்த தயாநிதிமாறன்

image

மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News March 27, 2024

சென்னை: நேற்று மட்டும் ரூ.1.42 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 27, 2024

சென்னையில் பால் விநியோகம் தாமதம்!

image

சென்னையில் இன்று(மார்ச் 27) பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், கொரட்டூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். மேலும், இத்தகைய தாமதத்திற்கு வருந்துவதாகவும் ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!