India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
தி.நகர் மேட்லி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 29-ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக ஒருவரைச் சந்திக்க வேளச்சேரி காந்தி ரோடு செல்வா நகருக்குச் சென்றார். அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம கும்பல், பழனிச்சாமியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவிட்டு உள்ளார் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெங்களூரு – சென்னை டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வழக்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்,மே 1 முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். அதன்படி, ஒரு மணி நேரம் முன்பாக புறப்படவுள்ளது.
சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதுகோவை-சென்னை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து வரும் (மார்ச் 31) நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் (எண் 06049) ஏப்.1ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: அசோக் நகர் வாசுதேவபுரம் பகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல விடுத்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் புரளி என தெரியவந்தது.
சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு கூட்டுறவு பண்டகால சாலைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தனசேகர் என்பவர் பெட்ரோல் போட்டுள்ளார். இந்நிலையில், சிறிது தூரம் சென்ற பிறகு பைக் நின்று உள்ளது. மெக்கானிக் இடம் காண்பித்தபோது, பெட்ரோலில் கலப்படம் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பெட்ரோல் வாங்கி நுகர்ந்து பார்த்தபோது அதில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்தது தெரியவரவே போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.