India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தொகுதியில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வடசென்னையில் 254 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 18 மிகவும் பதற்றமானவை; மத்திய சென்னையில் 192 வாக்குச்சாவடிகள் பற்றமானவை; தென் சென்னையில் 337 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்கா ஏப்.9ம் தேதியான செவ்வாய் கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய் கிழமைகளில் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும் நிலையில், தெலுங்கு புத்தாண்டையொட்டி ஏப்.9ம் தேதி அரசு விடுமுறை என்பதால் உயிரியல் பூங்கா செயல்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணிகள் நேற்று(ஏப்.5) நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி, உதவி வருவாய் அலுவலர் லக்ஷ்மண குமார், செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. இது மூர் மார்க்கெட்டிலிருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு அரக்கோணம் செல்லும். பின் அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு மாலை 5:00-க்கு சென்னை வரும். வழித்தடம்: பேசின் பாலம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை பீகாரைச் சேர்ந்த இரு வடமாநில இளைஞர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வந்தனர். திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் காயமடைந்து உயிர் இழந்தனர். ரயில்வே போலிசாருக்கு தகவல் அளித்தபின் உடலைக் கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகிற 9-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் காரில் நந்தனம் வழியாக பனகல் பூங்கா வருகிறார். அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார். சென்னையில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை மாநகர் முழுவதுமே டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 39,01,167 வாக்காளர்களில் 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர் என மொத்தம் 75,120 பேர் உள்ளனர். 4,176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் ஏப்.7ம் தேதி தபால் ஒட்டு பணி தொடங்குகிறது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவா் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள்,608 பதாகைகள், 2,050 இதர வகை விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.