Chennai

News April 10, 2024

சென்ட்ரலில் ரூ. 30 லட்சம் பறிமுதல்

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த ஹைதராபாத் விரைவு ரயில் பயணிகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, பையில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. நகை வாங்குவதற்கு கொண்டு வந்ததாக கூறிய அவர், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News April 10, 2024

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் விநியோகம்

image

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களை தேர்வு செய்யும் பணி ரிப்பன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்டத்தில் உள்ள 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News April 9, 2024

பிரதமர் மோடி வருகை – ஏற்பாடுகள் தீவிரம்

image

சென்னை: பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிப்பட்டு வருகிறது.

News April 9, 2024

சென்னை: 4 நாள் டாஸ்மாக் மூடல்!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17,18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இன்று(ஏப்.9) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 9, 2024

சென்னை: பிரதமர் வருகை! நெரிசலில் சிக்கிக்காதீங்க

image

சென்னை, தியாகராய நகரில் இன்று(ஏப்.9) பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை வாகன அணிவகுப்பு(ரோடு ஷோ) நடைபெறுகிறது. பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மவுண்ட் பூந்தமல்லி, ஜிஎஸ்டி சாலைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இதனால் பயண திட்டங்களை பொதுமக்கள் மாற்றி அமைப்பது நல்லது.

News April 9, 2024

வண்ணாரப்பேட்டை: தொழிலதிபர்கள் வீட்டில் சோதனை!

image

சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுனில், சஞ்சய் என்ற 2 தொழிலதிபர்கள் வீட்டில் அமலாகத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இன்று(ஏப்.9) காலை முதலே, போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் அலுவலகம், திமுக நிர்வாகி சிற்றரசு என பல முக்கிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2 தொழிலதிபர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News April 9, 2024

திமுக செயலாளர் வீட்டில் ரெய்டு

image

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குநர் அமீர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சிற்றரசு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. போதைப் பொருள் கடத்தில் வழக்கு தொடர்பாக் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

News April 9, 2024

சென்னை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

image

சென்னையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தோம் ஜாபர் சாதிக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், மாதவரம், அயனாவரம் என ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

News April 8, 2024

எம்ஜிஆரிடம் ஓட்டு கேட்ட திமுக நிர்வாகிகள்

image

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் மண்டல குழு தலைவர் திமுக தனியரசு பொதுமக்களிடமும் சாலையில் உள்ள வியாபாரிகளிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது கலைக்குழுவை சேர்ந்த கலைஞர் ஒருவர் எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அவரிடம் திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

News April 8, 2024

சென்னை: வரி வசூலில் புதிய சாதனை

image

சென்னையில், 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சொத்து மற்றும் தொழில் வரியாக ரூ.2,218 கோடியை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக வசூலித்துள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் வசூல் ஆகிய இரண்டையும் மிஞ்சியுள்ளது. வரி வசூல் செய்யப்பட்ட இடங்களில் தேனாம்பேட்டையில் அதிக வசூல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!