Chennai

News April 13, 2024

கோயம்பேடு சாலையில் தண்ணீர் லாரி விபத்து

image

சென்னை கோயம்பேடு சாலையில் இன்று தண்ணீரை நிரப்பி கொண்டு சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது லாரியின் இரண்டு முன் சக்கரங்களும் கழன்று ஓடியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், லாரியில் இருந்த குடிநீர் சாலையில் வீணாக கொட்டியது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 12, 2024

சென்னை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

ரயில்களின் பாதுகாப்பான இயக்கம் காரணமாக திருப்பதி யார்டில் என்ஜினீயரிங் பேணிகள், தண்டவாள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை, அரக்கோணம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து செல்லும் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 12, 2024

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு

image

சென்னை அடையாற்றில் உள்ள சஞ்சு கால்நடை மருத்துமனையில் செல்லப் பிராணிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நாளை(13.04.24) (ம) நாளை மறுநாள்(14.04.24) நடைபெறவுள்ளது. இம்முகாம் அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில் சருமப் பரிசோதனை, முடி, தோலின் மேற்பகுதி ஆகிய பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், செல்லப்பிராணிகள் வைத்துள்ளவர்கள் 93550 53890 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News April 12, 2024

அடையாறு ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

சென்னை, ஜாபர்கான்பேட்டை அடையாறு ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தனுஷ்(14) என்பவர் தனது நன்பர்களுடன் நேற்று அடையாறு ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

News April 11, 2024

சென்னையில் ரூம் போட்டு செயின் பறிக்கும் கும்பல்

image

பெரம்பூர் பகுதியில் தலைமை காவலர் மனைவி உட்பட இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் அரியானாவை சேர்ந்த சச்சின் குமார் 24, அங்கீத்24 அங்கீத் யாதவ் 26, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணையில் மூன்று பேரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News April 11, 2024

இன்று முதல் காவலர்களுக்கு தபால் வாக்கு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரி (ம) காவலர்கள் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காவலர்கள் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம். 

News April 11, 2024

சென்னையில் போக்குவரத்து மாற்றம் 

image

சென்னை குடிநீர் வடிகால் வாரியம், ஈவிகே சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சாக்கடை வடிகால் பணியை மேற்கொள்ள இருப்பதால் நேற்று முதல் வரும் 13ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஈவிகே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை நாராயணகுரு சாலை சந்திப்பிலிருந்து ஈவிகே சம்பத் சாலை- ஜெர்மியா சாலை சந்திப்பு வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

News April 10, 2024

சென்னை: விஷவாயு தாக்கி இருவர் பலி

image

மணலி விரைவு சாலையில் உள்ள தமிழ்நாடு பெட்ரோல் புராடக்ட் லிமிடெட் தொழிற்சாலையில் இன்று கூலித் தொழிலாளிகள் இருவர் அங்குள்ள டேங்கை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 10, 2024

சென்னையில் 611 வாக்குச்சாவடி பதற்றமானவை

image

தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அதில் மிகவும் பதற்றமானவையாக 23 வாக்குச்சாவடிகள் உள்ளது. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

News April 10, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(11.04.24) ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!