Chennai

News April 15, 2024

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் கொள்ளை

image

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் அன்பழகன் என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 15, 2024

மீண்டும் சென்னையில் வெப்ப அலை

image

தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலைகள் தாக்க உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 42° செல்சியஸும், சென்னையில் 40° செல்சியஸும் பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த தாக்கம் வியாழக்கிழமை (ஏப்.18) முதல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

சென்னையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சென்னை மண்டலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 14-15-16- தேதி மட்டுமே இயங்கும். ஏப். 17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படுள்ளது.

News April 14, 2024

நூதன பிரச்சாரம் செய்த ஆர்கேநகர் எம்எல்ஏ

image

தண்டையார்பேட்டை 42வது வார்டுக்குட்பட்ட இரட்டை குளி தெருவில் இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் மற்றும் 42 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, ஜெய் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பொன் இளவரசன் வட்டச் செயலாளர் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கையில் வடைகளை வைத்து மத்திய அரசு வாயால் வடை சுடுகிறது என்பதை காட்டும் வகையில் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தனர்.

News April 14, 2024

கோயம்பேடு மார்கெட்டில் பூ விலை உயர்வு

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே சிறுவியாபாரிகள் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதில் மல்லி (ம) ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, ₹சாமந்தி 300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 என விற்கப்பட்டது.

News April 14, 2024

காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்

image

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர். ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பல்வேறு வகையான மீன்கள் விற்கப்பட்டது. மேலும் மீன்பிடி தடைகாலம் வரவுள்ளது என்பதால் மீன் விலை தற்போது உயர்ந்துள்ளது.

News April 14, 2024

மருத்துவக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

image

சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவர் ரோகன் என்பவர் மீது நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 13, 2024

தண்டையார்பேட்டை :சாலையில் திடீர் பள்ளம்

image

ஆர் கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள டி எச் சாலையில் மூன்றடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கொம்பு வைத்துள்ளனர். மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 13, 2024

சென்னையில் போலீசார் வாகனம் மோதி பலி

image

திருவொற்றியூர் அங்காளம்மன் கோயில் பீச் ரோட்டில் உள்ள போலீஸ் பூத் அருகே போக்குவரத்து போலீசாரின் ரெக்கவரி வாகனத்தை தர்மராஜ் என்ற காவலர் பின்பகுதியில் இயக்கும்போது பின்னால் படுத்திருந்த மஞ்சுளா (38) என்ற பெண்மணி மீது தலையில் ஏறியதால்  சம்பவ இடத்திலேயே பலியானர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 13, 2024

காவலர்கள் வாக்கு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை(14.4.24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், 3 இடங்களில் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றோடு முடிந்த நிலையில் மேலும், தேவைப்பட்டால் கால அவசாகம் நீட்டிக்கப்படும் என்றார்.

error: Content is protected !!