India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் கடந்த மார்ச் 12ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை 7 நாளில் போதைப்பொருள் விற்றதாக 34 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, 364 போதை மாத்திரைகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யபட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற அனைத்து மண்டலங்களிலும் இன்று மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள், விளம்பரங்களை மறைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் எம்பிராய்டரி இலவச பயிற்சிக்கு டோக்கன் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் சாமியானா பந்தல், பேனர் வைத்து உணவு வழங்கியதாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
காசிமேடு பகுதியில் கலா என்ற 65 மூதாட்டி மகன் சீனிவாசன் உடன் வசித்து வந்தார். அடிக்கடி கலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால், நேற்று கலாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் 974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி(வட சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன்(தென் சென்னை), தயாநிதி மாறன்(மத்திய சென்னை) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர்.
Sorry, no posts matched your criteria.