India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு கூட்டுறவு பண்டகால சாலைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தனசேகர் என்பவர் பெட்ரோல் போட்டுள்ளார். இந்நிலையில், சிறிது தூரம் சென்ற பிறகு பைக் நின்று உள்ளது. மெக்கானிக் இடம் காண்பித்தபோது, பெட்ரோலில் கலப்படம் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பெட்ரோல் வாங்கி நுகர்ந்து பார்த்தபோது அதில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்தது தெரியவரவே போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட விபத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பினை பொறுத்தவர, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த வட திருச்செந்தூர் திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கேயம்பேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தள்ளுவண்டி கடை ஒன்றில் வடை சாப்பிட்டு, பணத்தை செல்போனில் அனுப்பினார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்னதாக பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருந்த நிலையில், தற்போது சிறிய கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாக தெரிவித்தார்.
திருவொற்றியூர் பகுதி ஏழாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சரவணா நகர் மற்றும் ஆர்.எம்.வீ நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் அவர்கள் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் உடன் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.