Chennai

News May 10, 2024

தியாகராய நகர்: அன்னதானம் வழங்கும் நடிகை நமீதா

image

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவர் 2019ம் ஆண்டு வெளியான ‘பொட்டு’ படத்துக்குப் பிறகு திரையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் இன்று(மே 10) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நமீதா, தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு மேல் கோயில் அருகில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவுள்ளார்.

News May 10, 2024

10th RESULT: சென்னையில் 88.21% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 88.21% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.99% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.34% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை!

image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 5ம் தேதி 7 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் 14 ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறியுள்ளனர்.

News May 9, 2024

காமராஜர் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும்  ஜி.கே.வாசன்

image

காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காமராஜர் நினைவிடமானது கோடிக்கணக்கான மக்களுக்கு புனித இடம். அவரின் நினைவிடத்தை முறையாக பராமரிப்பது அவசியமானது. அதை முறையே செய்ய தவறிய தமிழ்நாடு அரசு கடமை உணர்வோடு பராமரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News May 9, 2024

சென்னை: திமிங்கல எச்சம் வைத்திருந்தவர் கைது!

image

எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அவரிடம் 800 கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து சிலம்பரசனை இன்று(மே 9) கைது செய்தனர்.

News May 9, 2024

வேலை வாங்கி தருவதாக 20 லட்சம் மோசடி !

image

எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(28). பொறியியல் பட்டதாரியான இவர் வேலையின்றி இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தீபக்(28) என்பருடன் அறிமுகமாகியுள்ளார். தீபக் தனது உறவினர் பெங்களூர் ஐடி கம்பெனியில் மேலாளராக உள்ளதாகவும் அவரிடம் சொல்லி வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ 20 லட்சத்தை ஸ்ரீகாந்திடம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் தீபக்கை கைது செய்தனர்.

News May 9, 2024

சென்னை: உரிமை இல்லாதோருக்கு அபராதம்

image

சென்னையில் நாய் வளர்க்க உரிமம் பெறும்படி மாநகராட்சி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “சென்னையில் நாய் வளர்க்கும் அனைவரும் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் நாய் வளர்ப்பவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. 2023ல் 1,500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். 3 நாட்களில் உரிமம் பெற 1,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என தெரிவித்தார்.

News May 9, 2024

சென்னையில் மின்சார உற்பத்தி பாதிப்பு

image

திருவொற்றியூரை அடித்த மீஞ்சூர் அத்திப்பட்டில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல் மண் நிலையத்தில் இரண்டு அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலாவது அலகில் உள்ள மூன்றாவது நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகா வாட் மற்றும் 2வது நிலையில் 2வது அலகில் 600 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

EVM அறையில் கண்காணிப்பு கேமரா பழுது

image

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இன்று(மே 9) 2 கண்காணிப்பு கேமராக்கள் திடீரென பழுதாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் மட்டும் பழுதாகியதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

News May 9, 2024

அண்ணாநகர், அடையாறு சிகனல்களில் பந்தல்!

image

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் வெயிலில் வரும் வாகனம் ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில் சென்னையில், ரிப்பன் மாளிகை எதிரில் உள்ள சிக்னல், எழும்பூர் தமிழர் சாலை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பந்தல் அமைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!