India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை
தாய்மார்களை போற்றும் வகையில் இன்று(மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், “அன்னை என்பவர் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத வகையில் நம் வாழ்வை வடிவமைக்கிறார். நம் வாழ்வின் பேரன்பு மற்றும் நெகிழ்ச்சி மிக்க அற்புதமான தூண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளார்.
‘ஜீவிதா நௌகா ‘ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பேபி கிரிஜா. இதையடுத்து ‘அச்சன்’, ‘விஷப் பிண்டே விலி’, ‘பிரேமலோகா ‘, ‘அவன் வரன்னு ‘, ‘புத்திர தர்மம்’ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். பழம்பெரும் நடிகையான கிரிஜா (82) சென்னை அண்ணா நகரில் உள்ள
அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
மெட்ரோ ஊழியரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது இன்று சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆற்காடு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது குறித்து மெட்ரோ ஊழியர் வடிவேலுடன் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் வாக்குவாதம் ஏற்பட்டு வடிவேலுவை தாக்கியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கேற் தங்கள் திட்டங்களை அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு சாதாரண மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஆணையரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சைபர் குற்றத்திற்கு முடிவு இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு சாதாரண மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஆணையரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சைபர் குற்றத்திற்கு முடிவு இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு இன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.