Chennai

News May 14, 2024

மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.200 கோடி கையாடல்?

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருபவர் துளசிதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தொழிலாளர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.200 கோடியை மாநகர உதவி போக்குவரத்து கழக மேலாளர் ரஜினி என்பவர் கையாடல் செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நாள் ஆகியும் உரிய பதிலை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

சென்னை:  42 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

News May 13, 2024

சென்னை: என்ட்ரி ஆயிடுச்சா..அதிர்ந்த பயணிகள்

image

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சர்வ சாதாரணமாக தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். யாரும் எளிதில் நுழைய முடியாத சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பினை மீறி நாய்கள் புகுந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சுறுத்தும் வகையில் உலா வரும் நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 13, 2024

சென்னை மாநகராட்சியில் குவியும் விண்ணப்பம் 

image

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 10ம் தேதி சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 930 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள
விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

News May 13, 2024

வண்டலூர் பூங்காவின் சிறப்பு!

image

வண்டலூர் உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலை ஒரு புலி, ஒரு சிறுத்தையுடன் 1855இல் நிறுவப்பட்டுள்ளது. இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்ட, இந்தியாவின் பெரிய உயிரியல் பூங்காவாகும். சுமார் 228.4 ஏக்கர் பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 1,490 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

News May 13, 2024

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், தற்போது 1 கி.லோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கேரட் ரூ70க்கும், அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், எலுமிச்சை ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 13, 2024

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

பிளாக்கில் IPL டிக்கெட் விற்ற 10 பேர் கைது

image

சென்னையில், பிளாக்கில் IPL டிக்கெட் விற்ற 10 பேர் நேற்று (மே.12) கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 10 பேரை கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார், 27 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 13, 2024

‘பறக்கும்’ டாக்சி தயாரிப்பில் சென்னை IIT தீவிரம்

image

சென்னையில் சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, ‘பறக்கும் டாக்சி’ தயாரிப்பில் சென்னை IIT ஈடுபட்டுள்ளது. இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இதில் 2 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடையலாம். இது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடயது என தகவல்.

News May 13, 2024

சென்னை: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

image

சென்னை, புழுதிவாக்கம் 186 ஆவது வார்டு பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை, வீராங்கல் ஓடையில் இணைப்பது தொடர்பாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் 186 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் கலந்துகொண்டார்.

error: Content is protected !!