Chennai

News May 14, 2024

கிண்டியில் மஞ்சள் காய்ச்சல் ஊசி போட்டுக் கொள்ளலாம்

image

தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய
ஏதேனும் ஆவணங்களை காண்பித்து கிண்டியில் உள்ள பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் ஊசி போட்டு கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News May 14, 2024

சென்னையில் 4 நாட்கள் ரயில்சேவை ரத்து

image

பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
இன்று முதல் 17 ஆம் தேதி வரை மதியம் 12 :10 மணி முதல், மாலை 4:30 மணி வரை, 4 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News May 14, 2024

குற்ற வழக்கு இருந்தால் பாஸ்போர்ட் கிடையாது

image

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியது.

News May 14, 2024

சென்னையில் கஞ்சா விற்பனை 85 பேர் கைது

image

சென்னை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7 ஆம் தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்து 85 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 37.92 கிலோ கஞ்சா, 3.5 கிலோ கிராம் ஓப்பியம் , 2 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 14, 2024

மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி

image

சேலம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் அஸ்பரித் அஜய். இவரது நண்பர் கரிகாலன் மூலம்சென்னை மாநகராட்சியில் வேலை பார்த்து வரும் தினேஷ் என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில் இவர் அஜய்யிடம் சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.16.5 லட்சம் வாங்கியுள்ளார். பின் 2 வருடமாக ஏதும் சொல்லாமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து நேற்று கொடுத்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 14, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 – வது நடைமேடையை நேற்று மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ரயிலின் கதவு அருகே நின்று விளையாடி கொண்டு இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை படிக்கட்டு வழியாக தவறி வெளியே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் குழந்தை உயிர் தப்பியது.

News May 14, 2024

சென்னை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 33ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.02% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: சென்னையில் 92.02% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 88.52% பேரும், மாணவியர் 94.51% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

சென்னை: 1 வாரத்தில் 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

News May 14, 2024

மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.200 கோடி கையாடல்?

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருபவர் துளசிதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தொழிலாளர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.200 கோடியை மாநகர உதவி போக்குவரத்து கழக மேலாளர் ரஜினி என்பவர் கையாடல் செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நாள் ஆகியும் உரிய பதிலை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!