India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
31.03.2024 முதல் 04.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரிமலைக்கு சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உட்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் உடல் முறையாகபரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் பற்றி புகார் கொடுத்துள்ளார் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள அந்த ஒலி-ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார் .
ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள். தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகியவற்றை இணைக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் விடுதி உரிமையாளர் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்
சென்னை விமான நிலைய அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் 9க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்து கொல்லப்பட்டு, தெருக்களில் வீசப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள், புகைப்பட ஆதாரங்களுடன் பீட்டா அமைப்புக்கு புகார் தெரிவித்தனர். இது பற்றி நேற்று மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், புகார் அளித்துள்ள பீட்டா அமைப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்
சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக, தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம், என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.