Chennai

News March 22, 2024

கட்சிக் கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரிகள்

image

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கட்சிக் கொடியுடன் வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்தினர். மேலும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.

News March 22, 2024

நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

image

சென்னையில் இன்று(மார்ச் 22) இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காலை முதலே வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருகிறது.

News March 21, 2024

சென்னை: மார்ச் 23ஆம் தேதி ஆலோசனை

image

சென்னையில் மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23ம் தேதி பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் அரசு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

சென்னை: ரொக்கமாக கொண்டு செல்ல தடை

image

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில் ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக
கண்காணிக்கப்படுகின்றனர் . பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 21, 2024

தென்சென்னையில் தமிழிசை போட்டி

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் செல்வமும் போட்டியிட உள்ளனர். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

News March 21, 2024

சென்னை: ரசாயன சிலிண்டர் வெடித்து பலி

image

சென்னை கொளத்தூரில் ரசாயன சிலிண்டர் வெடித்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்பரஸ் எனும் வேதிப்பொருள் வெடித்ததில் மாணவர் ஆதித்யா உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 21, 2024

ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னையில், ஐபிஎல் போட்டி நடைபெறும் மார்ச் 22(நாளை) மற்றும் 26ம் தேதிகளில் வேளச்சேரி – சிந்தாதிரிபேட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐபிஎல் டி-20 தொடரின் 17வது சீசன் நாளை(மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை அணியின் போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் வருவர் என்பதால், போக்குவரத்துக்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

News March 21, 2024

சென்னையில் IT சோதனை

image

சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. நீலாங்கரையில் பாலா என்பவரது வீட்டிலும், கேஸினோ டிரைவ், ப்ளூ பீச் சாலை மற்றும் அண்ணா நகர் அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 21, 2024

சென்னை: 4 பேர் வேட்பு மனு தாக்கல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று(மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்நாளில் சென்னையில் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். டெபாசிட் தொகையாக பொது பிரிவினருக்கு ரூ.25 ஆயிரமும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,500 செலுத்த வேண்டும்.

News March 20, 2024

சென்னை வாசிகளே..அந்தப் பக்கம் போகாதீங்க

image

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை என சென்னை மாநகர போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!