India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ். ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை மீட்பதற்காக தனது தந்தையிடம் ரூ.24,000 கேட்ட நிலையில் ரூ.4,000 மட்டுமே கொடுத்துள்ளார். விரக்தி அடைந்த தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட் தெருவில் வசித்து வந்தவர் கௌதம் (25). இவர் தனது நேற்று வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜா (எ) ராஜா பாய் (28), பிரதீப் (எ) குள்ளு (26), தி.நகரை சேர்ந்த சுரேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
போரூர் காரம்பாக்கம், பொன்னி நகர் வல்லார் தெருவில் தனது தாயுடன் வசித்து வந்தவர் தினேஷ் கண்ணா (25). தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், இன்று காலை தனது அறையில் தாயின் புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தினேஷ் தான் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையில் சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்தது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இரட்டை வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6-வயது சிறுவனை ஸ்டெல்லா என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதனை ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸில் ஒப்படைத்தனர்.
சென்னை: புளியந்தோப்பு பகுதியில் அருண்குமார் என்பவரின் 6வயது மகன் ஹரிஷ்குமார் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கே வசிக்கும் ஸ்டெல்லா என்பவருடைய வளர்ப்பு நாய் சிறுவனின் கை, கால்களில் கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து போலீசார் ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.