India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரயில்கள் இன்றும்(மே 18), நாளையும்(மே 19) ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர்- விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து, மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 5.35 மணிக்கு இந்த ரயில் புறப்படும். பின் மறுமார்க்கமாக மே 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்படும்.
அடுத்த வாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில் மரக்கன்று நடுவதற்கு இடங்களை மாநகராட்சி தேர்வு செய்து வருகிறது. குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் இலவசமாக மர கன்றுகளை நட மாநகராட்சி அலுவலகத்தை நாடலாம். இது போன்று இது வரை 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திப்பு சுல்தான் (36). இவரது வீட்டிற்கு ஒரு வாரமாக ரவுடி கும்பல் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25), கார்த்திக் (32), கார்த்திக் (எ) பூ கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (46). மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர். நேற்று இரவு சபரி சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதே வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலந்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் பஷீர். தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். நேற்று இரவு வந்த அதிகாரிகள் இந்த இடம் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமானது இது குறித்து விளக்கம் அளிக்க நாளை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் எனக் கூறிச் சென்றனர். ஆனால் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டை ஜேசிபி மூலம் இடித்து விட்டனர். இதுகுறித்த புகாரில் பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 23 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக 44 பேருந்துகள், தினசரி காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.
மலேசியா நாட்டில் இப்போ நகரில் நடைபெற்ற 20 சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்
22 பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி இன்று(மே 17) முதல் மே 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று(மே 17) 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் உள்ள திரவத்தை எடுத்து குடித்துள்ளார். வாந்தி பேதி எடுக்கவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.