India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சைதாப்பேட்டையில் கௌதம் (23) என்பவர் ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த கௌதமை, அப்பெண்ணின் முதல் கணவர் ராஜ்கிரண் உட்பட 6 நபர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் தொடர்புடைய 3 நபர்கள் கடந்த 16ஆம் தேதி கைதாகினர். இந்நிலையில் நேற்று ராஜ்கிரண், மணி, சுகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன். நாட்டில் பிரச்சனையே அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்பதுதானே. விஜய்யும் நானும் சந்திப்பதில் என்ன பிரச்சனை. மேலும் விஜயுடனான கூட்டணிக்கு I AM WAITING” என தெரிவித்தார்.
பசுமையாகும் சென்னை என்ற தலைப்பில் சென்னை முழுவதும் சென்னை மாநகராட்சி மரக்கன்றுகளை நட்டு வருகிறது. பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட சென்னை மாநகராட்சியை அணுகலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் நேற்று வரை 557 மரக்கன்றுகளும், நேற்று மட்டும் 77 மரக்கன்றுகளும் மாநகராட்சியால் நடப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியாவிற்கு நேரடி விமான சேவை இல்லை. இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வரும் 01.06.2024 முதல் சென்னை – சவுதி அரேபியாவின் கிழக்கு மாநாடு தலைநகரான தம்மாம் இடையே வாரத்திற்கு 2 முறை – ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் நேரடி சேவையை தர உள்ளதாக அறிவித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்காக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ரூபாய் 96.10 கோடி ஜிஎஸ்டி விதித்து மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து குடிநீர் வழங்கல் வாரியம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆணையரின் உத்தரவை இன்று ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை மூலம் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.150 செலுத்தி ரூ.100-க்கான சுற்றுலா அட்டையை பெற்று, அட்டையை திருப்பி செலுத்தியவுடன் வைப்பு தொகையான ரூ.50 திருப்பித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
தி.நகர் விஜயராகவா சாலை ஹயக்ரீவர் கோவிலில் சமையல் உதவியாளராக பணி புரிந்த தினகர் திரிபாதி ஏப்ரல் 19 ஆம் தேதி கோவில் சாமி சிலையில் இருந்த 20 சவரன் சங்கிலி மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி விட்டு மாயமானார். இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நேற்று அவரை கைது செய்து ரூ.4.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டிதெரு சந்திப்பு வரை மெட்ரோ பணி நடைபெறவுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள், வடமலை தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடமலை தெரு, அருணாசலம்தெரு, வெங்கடேச பக்தன்தெரு வழியே செல்லலாம். இது ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் தீப்லி. வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வந்த இவர், தன் ஊருக்கு திரும்பிச் செல்வது எப்படி எனத் தெரியாமல், சென்னையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்பட்ட சிறு சிறுவிபத்துக்களால், காயமடைந்து சாலையோரத்தில் தங்கியிருக்கிறார். இவரை மீட்ட மருத்துவ ஊழியர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அவரது உறவினர்களிடம் சேர்த்தனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் செந்தமிழரசி. இவரிடம், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.35,000 மோசடி நடைபெற்றுள்ளது. இதே போல் ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ‘லிங்க்’ அனுப்பி நித்யா என்ற பெண்ணிடம் ரூ.1.69 லட்சம் பறித்துள்ளனர். மேலும் அவரது கிரெடிட் கார்டு மூலமாகவும் ரூ. 1 லட்சம் மோசடி அரங்கேறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.