India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குளம் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் விழுப்புரத்தை சேர்ந்த சிவா, திருவள்ளூரை சேர்ந்த ரகுபதி, பொள்ளாச்சியை சேர்ந்த கோபி ஆகிய 3பேரும் நேற்று இரவு உணவு அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3பேர் காயமடைந்தனர். 3பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கட்டிடம் 50 ஆண்டு பழமையானது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதற்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். உடன், துணைத்தலைவர் சொர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவரும், வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவருமான M. S.திரவியம் ஆகியோர் இருந்தனர்.
விமான நிலையத்தில் சஞ்சிகா(28) என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் நேற்று இரவு அலையன்ஸ் ஏர் என்ற விமான மூலம் யாழ்ப்பாணம் செல்ல குடியுரிமை சோதனைக்கு சென்றனர். அப்போது சஞ்சனா மற்றும் அவரது குழந்தைகள் உள்ளிட்ட மூவருக்கும் ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சஞ்சிகா ஹைதராபாத் போலீசிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலைய புறப்பாட்டு பகுதியில் விமான நிலைய உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணி புரியும் மணிகண்டன் (28) கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை பரிசோதித்த போது அந்த பிளாஸ்கினுள் காபிக்கு பதிலாக 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தது. இதனை அடுத்து சுங்க அதிகாரிகளால் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சியில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்ற பட்ஜெட் கூட்டத்தில், மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை வளர்க்கும் தொழுவத்திற்கு லைசன்ஸ் பெறுவது கட்டாயம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விதி வரும் ஜூன் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாடுகளால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக, இத்தகை நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் இன்று(20.5.24) அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதவாது 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, நந்தனம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வராணாசியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 15 ஆம் தேதி வந்த கங்கா காவேரி விரைவு ரயிலை நேற்று காலை 6 மணிக்கு பேசின்பிரிட்ஜ் யார்டில் சுத்தம் செய்த போது, முன்பதிவில்லா பெட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதன் பையில் வராணாசி முதல் சென்னை வரையிலான ரயில் பயணச்சீட்டு இருந்தது. இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேற்று ஒருவர் மனு கொடுக்க வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து விசாரித்த போது மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் தான் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும் வேறுயாரும் போதைக்கு அடிமையாகி விட கூடாது என முதலமைச்சரிடம் நேரில் தெரிவிக்க வந்ததாகவும் கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) பெற்றோர்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மே 25 கடைசி நாள் ஆகும். ஆசிரியர்கள் பெற்றோர்களின் மொபைல் எண்களை பதிய முற்படும் போது பெற்றோர்களின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை அவர்கள் பகிர்ந்து கொள்ள மறுக்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வட பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா காலை விமரிசையாக தொடங்கியது. அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேள தாளம் முழங்க பக்தர்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து தேரில் எழுந்தருளிய சாமியை வழிபட்டனர்.
Sorry, no posts matched your criteria.