India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை துரைப்பாக்கத்தில், பெண் விவகாரத்தில் தாக்கப்பட்ட இளைஞர் இன்று (மார்.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீவரத்தினம் என்ற இளைஞரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். CSK அணியை கிண்டல் செய்ததற்காக முதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பெண் விவகாரம் என பின்னர் தெரியவந்துள்ளது.
சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு (26) தொடர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகி உள்ளது. மேலும், மாணவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்) வெயில் பதிவானதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
சென்னையில் இன்று (29.03.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று வெயில் சதமடித்துள்ளது(102.5). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க
சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக்குகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் (33) என்பவரை போலீசார் இன்று (மார்.29) கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேனாம்பேட்டையில் பைக்கை திருடி, புதுப்பேட்டையில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (மார்.29) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் சுமார் 20,000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த <
சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய சிசிடிவி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.