India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில், சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த செல்லம்மாள் சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செல்லம்மாள் மீது இன்று(மே 21) எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று(மே 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வெப்பம் தணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை IIT வளாகத்தில் இசைஞானி இளையராஜாவின் பெயரில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இளையராஜா மற்றும் சென்னை IIT இடையே கையெழுத்தான நிலையில், ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் நேற்று(மே 20) மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவும் கலந்துகொண்டார்.
சென்னையில் மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது. இதன்படி, மாடுகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனாவிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்மனின் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர் ஆன அமீனாவிடம் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் பிறந்தநாள் விழா இன்று (மே 20) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில், “தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிட பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம். முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை நிமித்தமாக நேற்று சென்னை வந்தார். அப்போது, சென்ட்ரலில் கொளத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுகுமாரிடம் ஏதாவது விடுதியில் விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ராமாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரிடம் ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராமாபுரம் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி சுரேஷ் பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிக்னல் கோளாறால் சிங்க பெருமாள் கோவில் – மறைமலை நகர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரே தண்டவாளத்தில் 4 மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக குறைந்த இடைவெளியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் ஒரு மணி நேரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பின் ரயில் போக்குவரத்து சீரானது.
சூளைமேடு வீரபாண்டி நகரை சேர்ந்தவர் பாஜக வட்ட தலைவர் ராஜேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு சூளைமேடு ஐயப்பன் கோயில் அருகே உள்ள கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அங்கு அமர்ந்திருந்த அமைந்தகரை வ.உ.சி காலணியை சேர்ந்த விஷ்ணு கார்த்திக் (32), கதிரவன் காலணியை சேர்ந்த ராஜன் (25), வினோத் கிருஷ்ணன் (40) ஆகியோர் கிண்டல் செய்து, இவரை அடித்து உதைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.