India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக இன்று சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ₹1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து கேட்டறிந்தனர்.
நாவலூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (17.03.2024) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ பணிகளால் இன்று(மார்ச் 16) முதல் ஒரு வாரத்திற்கு OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் துர்யா ஹோட்டல் முன்பு ‘U-turn’ செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூரிலிருந்து வருவோர் உலக வர்த்தக மையம் முன்பு ‘U-turn’ எடுத்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்.
சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.