Chennai

News May 23, 2024

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

image

சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் பழைய பொருட்களை சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் திடீரென்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையினர் அசோக் நகர், கிண்டி ஆகிய பகுதி தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

News May 22, 2024

சென்னையில் போதை பொருட்கள் வழக்கில் 51 பேர் கைது

image

சென்னையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 15 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 7 நாட்களில் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 47 வழக்குகள் பதிவு செய்து 51 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 235.181 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 4.86 கிலோ மாவா மற்றும் ரூ.28,850 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News May 22, 2024

மோசமான வானிலையால் மீண்டும் திரும்பிய விமானம்

image

சென்னையில் இருந்து அந்தமானுக்கு 142 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ஆகாசா ஏர் விமானம் மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிரங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அதனை தொடர்ந்து விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் நாளை‌ புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

News May 22, 2024

லண்டனுக்கு இணையாக மாறும் சென்னை

image

இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமான வொண்டர்லா, சென்னையில் தன்னுடைய தீம் பார்க்கை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் இள்ளளூரில், 62 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த தீம் பார்க்கில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமையவுள்ளது. லண்டனுக்கு அடுத்தபடியாக பல அம்சங்கள் கொண்ட தீம் பார்க்காக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

News May 22, 2024

சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்

image

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி கனியாமுத்தூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் தயார் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தோம். அந்த நேரத்தில் மகள் ஸ்ரீமதி குறித்தும் தன்னை பற்றியும் சவுக்கு சங்கர் கூட்டு சதி செய்து தெரிந்தே அவதூறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார்” என கூறியுள்ளார்.

News May 22, 2024

காங்கிரஸ் கட்சிகள் இணைந்த அதிமுக நிர்வாகி

image

காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் இன்று (22.05.2024) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுஜாதா, அதிமுகவில் இருந்து விலகி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

News May 22, 2024

உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நியமனம்

image

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் வி.கங்காபூர்வளா நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் மூத்த நீதிபதி ஆர் மகாதேவனை பொறுப்பு நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மே 24 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாகவும் ஆர் மகாதேவன் பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

சென்னை: மழைக்கு வாய்ப்பு!

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 22, 2024

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

image

காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு அரசியலையும் ஜாதி மத மொழி அரசியலையும் மேற்கொண்டு வருவதாகவும் தமிழர்களை இழிவு படுத்துவதாகவும் தெரிவித்தார்.

News May 22, 2024

2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்

image

சென்னையில் மே24 முதல் ஜூன் 2ம் தேதி வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 4மண்டலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!