India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரின் காலில், துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துப்பாக்கியை சரிபார்க்கும் போது உதவி ஆய்வாளர் தவறுதலாக விசையை அழுத்தியதில், எதிரே இருந்த தலைமை காவலர் சிவக்குமாரின் கால் முட்டியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் விசாரிக்கின்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் இன்று எழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இன்று மாலை 6 மணி வரை விசாரணை மேற்கொள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கினார். பின் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (43). இவர் நேற்று முகநூலில் ரூ500 மந்திர நோட்டை தொட்டு ரூ.5000 கேஷ் பேக் பெறுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய லிங்கை தொட்டுள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஜிபேயில் பெலன்ஸ் செக் செய்து பார்த்தபோது ரூ4650 வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 2 பேருக்கு, மூளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி மருத்துவர்கள் அசத்தல். இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை இளைஞருக்கு பொருத்திய நிலையில் நல்ல முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பல்லாவரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனத்தின். பொருட்காட்சிப் பூங்கா செயல்பட்டு வந்தது. உரிய அனுமதி பெறவில்லை என கூறி பல்லாவரம் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பொருட்காட்சி உரிமையாளர் செந்தில் குமார், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளிடம் அனுமதி வாங்கியுள்ளோம் எனவும், வருவாய் துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சார்பில் பொது செயலாளர்கள் டி.செல்வம், வழக்கறிஞர்கள் பி.தாமோதரன், அருள் பெத்தையா , உள்ளிட்டோர் இன்று போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலை அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, மறைமுகமாக தமிழர்களை திருடர்கள் என கூறி தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தனர்.
சென்னை மற்றும் புறநகரில் ரேஷன் கடைகள், காலை 8.30-12.30 மணி வரையும், பிற்பகல் 3-7 மணி வரையும் செயல்படுகின்றன. இங்கு மற்ற மாவட்டங்களை விட பிற்பகல் நேரத்தில் கூடுதலாக 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் சில ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உணவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, ரேஷன் கடைகள் பிற்பகல் மூடும் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கல்யாணி. இவர் தனது மகனுடன் திருவண்ணாமலை சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை போர் நினைவுச் சின்னம் அருகே வந்து கொண்டு இருந்த போது காரின் இடதுபக்க முன் டயர் வெடித்தது. இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
Sorry, no posts matched your criteria.