Chennai

News May 25, 2024

சென்னை ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

சென்னை ஐசிஎப் ரயில்வே நிறுவனத்தில்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்பட 9 வகையான பிரிவுகளில் மொத்தம் 1010 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 25, 2024

தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

image

ராயப்பேட்டையை சேர்ந்த ஒய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் ஹமீது உசேன். இவர் தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் – உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வந்தனர். இதை கண்காணித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.

News May 25, 2024

பட்டா மாறுதல் – தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை!

image

சென்னை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை, 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடைமுறையை விரைவு படுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

News May 25, 2024

போதை ஊசி செலுத்தியவர் மயங்கி விழுந்து சாவு

image

புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையைச் சேர்ந்த அமீர் பாஷா மகன் ஜாகீர்(17). நேற்று பிற்பகல் 3 மணியளவில் பிராட்வேயில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்து போதை ஊசியை செலுத்தினார். பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 25, 2024

சென்னை தயாராக உள்ளது!

image

சென்னை தி.நகரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, திடீர் மழை வரும்போது அதனை எதிர்கொள்ள சென்னை மட்டுமல்லாமல் எந்த நகரமாக இருந்தாலும் அதை தாங்காது. ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறது. மழையால் பாதித்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியிருக்கிறோம் என கூறினார்.

News May 24, 2024

இர்பான் மீது ஏன் நடவடிக்கை இல்லை – ஜெயக்குமார்

image

யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இர்பான், உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டிருப்பார்கள் ” என கூறினார்.

News May 24, 2024

சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு 9.25 மணிக்கு முன்பதிவில்லாத MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9 நிறுத்தங்களுடன் நாளை காலை 5.30 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

தலைமை காவலர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரின் காலில், துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துப்பாக்கியை சரிபார்க்கும் போது உதவி ஆய்வாளர் தவறுதலாக விசையை அழுத்தியதில், எதிரே இருந்த தலைமை காவலர் சிவக்குமாரின் கால் முட்டியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் விசாரிக்கின்றார்.

News May 24, 2024

சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த அனுமதி

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் இன்று எழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இன்று மாலை 6 மணி வரை விசாரணை மேற்கொள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கினார். பின் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

News May 24, 2024

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

image

நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!