India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பார்த்தசாரதி பெருமாள் கோயில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலாகும். திருவல்லிக்கேணியிலுள்ள இக்கோயிலின் கோபுரங்களும், மண்டபங்களும், சிற்ப கலையில் சிறந்து விளங்குகிறது. இக்கோயில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் பெருமாளின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. மிகப் பழமையான இக்கோயிலின் மேல் 12 ஆழ்வார்கள் பாடல் இயற்றியுள்ளனர்.
கோவை மருத்துவ கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் சரணிதா. ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரை முதற்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இது மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டத்தில் நடைபெற்றது.
சென்னை, வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் உதயகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை: தி.நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று (மே.26) வழக்குப்பதிவு செய்துள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ததாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடபழனி பக்தவச்சலம் முதல் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் மதுமிதா (15). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆறுமுகம் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தமடைந்த சிறுமி நேற்று காலை பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை புறநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யு ரயில், தற்போது சிறப்பு ரயிலாக சென்னை திருச்சி இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று (மே 26) இரவு 11 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியே, நாளை (மே 27) காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் கழிப்பறை வசதி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா -2024 நேற்று (மே25) நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் மக்களுக்காக தொண்டாற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளிரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.220-க்கும், சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், முள்ளங்கி ரூ.50-க்கும், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் ரூ.60-க்கும், சுரைக்காய்-ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்வால், மக்கள் ஆடிப் போயுள்ளனர்.
வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (52). இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், “நான் மும்பை போலீசில் இருந்து பேசுகிறேன். நீங்கள் கூரியர் மூலம் போதை பொருளை அனுப்பியுள்ளிர்கள். இவ்வழக்கில் ஜாமின் பெற ரூ.1.42 லட்சம் அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார். இவரும் அனுப்பியுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இவர் வடபழனி போலீசில் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.