India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருப்பவர் ஜாவித் சைபுதீன்(32). இவரிடம் பெண் ஒருவர், இரவு பார்ட்டிக்கு அழைத்ததின் பேரில் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு கும்பல் கடத்தி, ரூ.50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என மிரட்டியதால், இவர் அந்த கும்பலிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து தப்பி வந்துள்ளார். புகாரின் பேரில், சோனியா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (50). அதே பகுதியைச் சேர்ந்தவர் சபரி (30). இவர் ரூ.28000 பணத்தை தாமஸிடம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணத்தை சபரியிடம் தாமஸ் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தாமசை, சபரி அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சபரியை இன்று கைது செய்தனர்.
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 16 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் அண்ணன் முறை கொண்ட சிறுவன், அவனது நண்பன், டெய்லர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 மாதமாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக, சிறுமியின் சித்தி மூலம் இச்சம்பவம் வெளிவந்துள்ளது. பெற்றோர் மதுவுக்கு அடிமையானதால் சிறுமியை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று(28.5.24) பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.
டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் (20). இவர் ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக அப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் (28) என்பவர் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து இஸ்ரவேல் மற்றும் அவரது காதலியை வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
சென்னையில் பார்த்தசாரதி பெருமாள் கோயில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலாகும். திருவல்லிக்கேணியிலுள்ள இக்கோயிலின் கோபுரங்களும், மண்டபங்களும், சிற்ப கலையில் சிறந்து விளங்குகிறது. இக்கோயில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் பெருமாளின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. மிகப் பழமையான இக்கோயிலின் மேல் 12 ஆழ்வார்கள் பாடல் இயற்றியுள்ளனர்.
கோவை மருத்துவ கல்லூரி மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் சரணிதா. ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Sorry, no posts matched your criteria.