India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டீ கடையில் நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார் என்பவர் இன்று(மே 30) டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது கடையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பெண் கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியுள்ளார். காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் சேர்வதற்காக 1.30 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. இதில் 80 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்தும் , 53 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவிகளிடமிருந்தும் பெறப்பட்டிருப்பதாக கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 1.20 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டிவி தொகுப்பாளினி அளித்த புகாரில் மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டு விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கார்த்திக் முனுசாமி தரப்பு இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிண்டி தேசியப் பூங்கா, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ஆங்கிலேயரான ரோட்ரிக்ஸிடமிருந்து, அன்றைய மதிப்பில் ரூ.35,000 வாங்கியது. 1910இல் மொத்தம் 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. 1958இல் தமிழ்நாடு வனத்துறையிற்கு மாற்றப்பட்டது. 1961-1977 வரை 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபத்திற்கு போக, எஞ்சிய 270.57 எக்டர் காட்டுப் பகுதி 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது.
சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து ஜுன் 7,14,21,28 தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(மே 28) நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், “தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது” எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திமுக முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், “ஆளுநர் ரவி ஒரு கல்வியாளர் இல்லை. தமிழ்நாட்டைப் போல் விடுதலைப் போராட்ட வீரர்களை உயர்த்திப் பிடித்த மாநிலம் எங்கும் கிடையாது” என்று கூறினார்.
“சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், 268 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தமாக 922 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜூன் 3 ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்த நபர்களிடமிருந்து 1600 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதீஷ் (18), தனுஷ் (21), யோகராஜ் (21), விக்னேஷ் (23), அஜித் (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யூடியூப் சேனலுக்கு காதல் தொடர்பாக கொடுத்த பேட்டியை, அவரது அனுமதி இல்லாமல் அந்த சேனல் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் நேற்று(மே 28) கைது செய்துள்ளனர்.
தாம்பரம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார் (30). இவரது மனைவி அமுதா (27). நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து பைக்கில் வந்த 2 பேர் இவர்கள் மீது மோதி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.