Chennai

News June 1, 2024

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து!

image

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸின் இரு விமானங்கள் இன்று போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத வெப்ப அலை டெல்லியில் வீசுவதால் டெல்லிக்கு பெரும்பாலான பயணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். முன்பதிவு செய்த பயணிகள் வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்

image

கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய தீர்வை எட்டும் வகையில் மேம்பாலம் கட்ட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

சென்னை மெட்ரோ ரயில் மே மாத பயணம்

image

கடந்த மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தவர்கள் விவரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 01.01.24 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84, 63,384 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 36,97,773 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

வெறுப்பு அரசியலை விதைக்கும் பிரதமர்: திருமாவளவன்

image

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா கூட்டணி முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வெறுப்பு அரசியலை விதைக்கும் பிரதமர், விவேகானந்தர் போல் நற்பெயரை பெறமுடியாது. 10 ஆண்டு காலம் இருளில் மூழ்கிய தேசத்திற்கு வெளிச்சம் கிடைக்கப் போகிறது. இந்தியா கூட்டணி பெருவாரியான இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

News June 1, 2024

சென்னையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

image

வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், 2 பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மெட்ரோ பணி காரணமாக பள்ளம் ஏற்பட்டதா? வேறு ஏதேனும் காரணமாக பள்ளம் ஏற்பட்டதா? என விசாரணை செய்து வருகின்றனர்.

News June 1, 2024

மாநகர பேருந்துகளில் கதவுகள் பொருத்தம்

image

சென்னை (ம) புறநகர் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து படியில் தொங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், இனி புதிதாக வரும் பேருந்துகளில் கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News May 31, 2024

யூடியூப்பர் சித்து மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

image

பிரபல யூடியூப்பர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கார் ஓட்டும் பொழுது மொபைலில் பேசியதாகவும் மேலும் இரட்டை வசனங்கள் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் யூடியூப் சேனலை முடக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.

News May 31, 2024

மாணவிகள் விடுதியில் நிர்வாணமாக நின்றவர் கைது

image

சென்னை, பூக்கடை முத்துசாமி மேம்பாலம் அருகே பல்மருத்துவ கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பழைய கட்டடம் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு போதையில் ஒருவர் நிர்வாணமாக நின்றுள்ளார். இதுகுறித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலீசார் அந்தநபரை பிடித்து விசாரித்ததில் கொண்டித்தோப்பை சேர்ந்த முருகேசன்‌ (48) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 31, 2024

துணை நடிகைக்கு பாலியல் தொந்தரவு

image

விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த துணை நடிகை ஒருவர் புகாரளித்தார். அதில்,“அம்பத்தூரை சேர்ந்த கார்த்திக் (39) என்னை தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பல்வேறு கோணங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தார். பின் அதனை சமுக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.1.20 லட்சம் பறித்ததோடு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்” என கூறியிருந்தார். இதையடுத்து கார்த்திக் கைது செய்யப்பட்டார்

News May 31, 2024

ஒரே நாளில் 84 பேர் பணி ஒய்வு

image

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்த ஒரு துணை கமிஷனர் உட்பட ‌84 பேர் இன்ற ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்கள் அனைவருக்குமான பிரிவு உபச்சார விழா இன்று மாலை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ‌ஸ்டேடியத்தில் சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

error: Content is protected !!