India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 540 கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அப்போது, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ஒன்றாக சென்று வாக்களித்தனர். மேலும், 1977ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும், குடும்பத்துடன் ஒன்றாக சென்று வாக்களித்து வருவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தனர். பின்னர் 21 பேரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா(64). திமுகவில் பகுதி பிரதிநிதியாக இருந்து வந்த இவர் நேற்று(ஏப்.19) மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கல்லறை சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பணியில் இருந்தார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி வந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், அக்பர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதன்படி ஒட்டுமொத்தமாக வடசென்னை தொகுதியில் 69.26% வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னை தொகுதி 67.35% மற்றும் தென்சென்னை தொகுதி 67.82 % வாக்குகள் பதிவுடன் கடைசி இடங்களை பிடித்துள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் காலை முதல் குறைவான அளவில் வாக்குப்பதிவு காணப்பட்டது. பிற்பகல் வரை சென்னையில் 35% குறைவாகவே வாக்குகள் பதிவாகின. கடும் வெயில் காரணமாக குறைவான வாக்குகள் பதிவானதாகவும், தொடர் விடுமுறையால் பெரும்பாலான சென்னைவாசிகள் சொந்த ஊருக்கு சென்றதாலும் வாக்குப்பதிவு குறைந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளேன்.
தேர்தலில் திமுக மற்றும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும் என்பதே தமிழ்நாடு வாக்காளர்களின் மன நிலையாக உள்ளது என்றார்.
அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன.
மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நெற்குன்றத்தில் வாக்களித்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி அளித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் செல்போனை கொண்டு செல்லக் கூடாது என காவலர்கள் கூறியதால், வாக்காளர்கள் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளனர். வாக்களிக்கும் பொதுமக்கள் வாக்குச்சாவடி உள்ளே தொலைபேசி எடுத்து செல்ல வேண்டாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மீறுவோர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும், நாட்டை காக்க வேண்டும் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் நடிகர் யோகி பாபு தனது மனைவியுடன் வந்து வாக்கை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் வாக்களிப்பது முக்கியம். ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை பொதுத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.