India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னைப் பல்கலைக்கழக ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.unom.ac.in/ என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், பொருளாதாரத்தில் பின்தங்கியும் உள்ள மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி விழா நாளை(ஏப்.23) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும், ஏப்.23ம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்று(ஏப்.22) எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்.
சென்னை மாதவரத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஜான்சி என்பவரை திருமணம் செய்துள்ளார். புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல், தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம்(ஏப்.20) இதனை ஜான்சியின் தாய் வசந்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த புஷ்பராஜ், வசந்தியை கட்டையால் ஆத்திரம் தீர அடித்துக் கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து, தலைமறைவான புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று(ஏப்.21) ஒரு சில இறைச்சி கடைகள் மூடப்பட்டதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பல பகுதிகளை சேர்ந்த மக்கள் காசிமேடுக்கு மீன்களை வாங்க படையெடுத்து உள்ளனர்.
சமண சமயத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி தினம் இன்று(ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகள் விற்பனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி செயல்படும் கடைகள் மீது சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, வடசென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நடிகர் விஜய் நேற்று (ஏப். 19) சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுமார் 200 பேர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் , அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று(ஏப்ரல் 20) மாலை 4:30க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:50க்கு எழும்பூரை வந்தடையும். அதேபோல், நாளை (ஏப். 20) அதிகாலை 5:30க்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் பிற்பகல் 1:20க்கு எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.