India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் சாலையில் அருண் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புழல் போலீசார் அருணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: காசிமேடு எஸ்என் செட்டி சாலை அருகே இன்று தேசிங் என்ற ரவுடி படுத்திருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது தொடர்பாக காசிமேடு போலீசார் தேசிங்கின் பிரேதத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள மெரினா பீச், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக உள்ளது. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை முதல் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ நீண்டுள்ளது. 1880-களில் ஆளுநர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அவர்களால் சென்னை மெரீனா கடற்கரை புதுப்பிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய அடையாளமாக மெரீனா விளங்குகிறது.
சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.24) தோகாவில் இருந்து வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒருவரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் 5 நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது. 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தாயார் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சரளாவுக்கும் அவரது கணவனுக்கும் இடையே பல நாட்கள் பிரச்னை இருந்து வந்ததாகவும் தகவல்.
சென்னை, கே.கே.நகர் கன்னிகாபுரத்தில் கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் புகுந்து பொதுமக்களை கத்தியால் தாக்க முயற்சித்த ரவுடிகள் கோபி, சஞ்சய் ஆகியோரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகராறின்போது பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடிகளுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்ததில் சஞ்சய் படுகாயமடைந்தார்.
தண்டையார்பேட்டை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவளித்த காசிமேடு ஐஸ் மீன் கமிஷன் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் சால்வை அணிவித்து நேற்று மரியாதை செய்தார். இந்நிகழ்வில் மீனவ சங்க நிர்வாகி பாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார். அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஷித் இன்று புகார் அளித்துள்ளார். அதில் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் மோடி மத மோதல்களை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.