India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சர் ‘மாநில இளைஞர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 – 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். www.sdat.tn.gov.in தளத்தில் மே 1 – 15க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள், அட்டவணையிடப்பட்ட நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் ‘149’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (எ) லொட்டை ஆனந்தன். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(ஏப்.26) இரவு வீட்டு வாசலில் போதையில் இருந்தவரை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. அருகில் இருந்தவர்கள் ஆனந்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்துக்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை என ஆங்காங்கே புகார் எழுந்தது. இந்நிலையில் எம்.டி.சி நிர்வாகம் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் விமான நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததது. இதனையடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இன்று பிற்பகல் முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் சோதனைகள் காரணமாக உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.26) குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டியில் ஒரு பார்சல் இருந்ததை கண்டு அதிர்ந்த ஊழியர்கள் மத்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி, பிரித்து பார்த்தபோது அதில் 1,200 கிராம் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதை வைத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று(ஏப்.26) முதல் 3 நாளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 280 பேருந்துகளும், நாளை(ஏப்.27) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், ஏப்.28ம் தேதி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி, இன்று(ஏப்.26) முதல் 3 மாதம் நடைபெறுகிறது. இதனால் ராயபுரம் பாலம் & ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை; பாரிமுனை நோக்கி செல்ல அனுமதியுண்டு; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு பதிலாக வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி பாலம் வழியை பயன்படுத்த அறிவுறுத்தல்.
சென்னை மாநகராட்சி சார்பில், வெப்ப அலைகள் குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வணக்கம் சென்னை வாசிகளே!, உங்களுக்கு தாகமாக இருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் உடல் வெப்பநிலையை சமப்படுத்த வேண்டும் என்று பொருள்; உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்: வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.