Chennai

News May 3, 2024

சென்னை: ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு!

image

சென்னையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நேற்று(மே 2) முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில், நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறை 471 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 121 காவல்துறை வாகனங்களும் அடக்கம். முதல் நாளில் பிடிபட்டோருக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியதோடு, ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

News May 3, 2024

சென்னை: IPL டிக்கெட் விற்ற 13 பேர் கைது

image

சென்னை – பஞ்சாப் இடையேயான போட்டி நேற்று முன்தினம்(மே.1) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின்போது கள்ளச்சந்தையில் சிலர் டிக்கெட் விற்பனை செய்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி காவலர்கள், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேர் கைது

image

சென்னை- பஞ்சாப் இடையேயான போட்டி நேற்று (மே.1) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் போது கள்ளச்சந்தையில் சிலர் டிக்கெட் விற்பனை செய்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி காவலர்கள், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

தற்காலிக டிரைவர் பணிக்கு அறிவிப்பு

image

ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 15 தற்காலிக டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு படித்த 25 வயதிற்குள்ளோராக இருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவத்துடன் சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்தை இயக்கும் லைட் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6 ஆகும். மேலும் விவரங்களுக்கு <>லிங்க் கிளக்<<>> செய்யவும்

News May 2, 2024

மனைவி மரணம்: கணவர் வைத்த வேண்டுகோள் 

image

சென்னை: பின்னணி பாடகி உமா ரமணன்(69) வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவு குறித்து உமாவின் கணவரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஏ.வி.ரமணன், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த சம்பவம் எதிர்பாராத ஒன்று. உமாவின் இறுதிச் சடங்கு எங்களது தனிப்பட்ட நிகழ்வாக இருக்க விரும்புகிறோம். இதனால், ஊடகங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News May 2, 2024

சென்னை டூ திருவண்ணாமலைக்கு இன்று ரயில் சேவை

image

சென்னை- திருவண்ணாமலை இடையே ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்ட மெமு ரயில் சேவை இன்று(2.5.24) மாலை 6 மணிக்கு தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், தி.மலைக்கு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும், பின் தி.மலையில் இருந்து மறுநாள் 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 9.50 மணிக்கு வந்தடையும்.

News May 2, 2024

கடை ஊழியர் மீது தாக்குதல்: கேஜிஎப் விக்கி கைது

image

வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் கே.ஜி.எஃப் என்ற பெயரில் விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பு பணிபுரிந்த ரிஸ்வான் என்ற ஊழியரை கடந்த மாதம் ஆட்களை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News May 2, 2024

சென்னையில் 3 நாட்களுக்கு வெப்ப அலை

image

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

சென்னை: நடிகர் நாசர் பெயரில் மோசடி!

image

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நாசர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் பெயரில் சிலர் போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாசர் பெயரில் போலி கணக்குகள் மூலம் நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

அரசியல் கட்சிகளுக்கு நீர், மோர் பந்தல் திறக்க அனுமதி

image

அரசியல் கட்சியினர் சென்னையில் தண்ணீர் பந்தலை திறக்கலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை. இதன் மூலம் எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது. கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடைபிடிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!