Chennai

News May 4, 2024

கைகளை இழந்தவருக்கு முதல் முறையாக லைசன்ஸ்!

image

சென்னையை சேர்ந்தவர் தான்சென்(31). இவர் சிறுவயதிலேயே இரு கைகளை இழந்தபோதும் மனம் தளராமல் கார் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றார். லைசன்ஸ் கோரிய அவருக்கு சில சிக்கல்கள் எழுந்ததால், மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அவரது காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் கால்கள் மூலம் கார் ஓட்டி காட்டி லைசன்ஸ் பெற்றார். இதன் மூலம் கார் லைசன்ஸ் பெற்ற முதல் கைகள் இல்லாத நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

News May 4, 2024

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

image

மதுரையில் நாளை(மே 5) வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்ககங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை வழங்கம்போல் செயல்படும் என கோயம்பேடு பூ மார்க்கெட் து.தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

சென்னையில் மஞ்சள் அலெர்ட்!

image

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடல் அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்

image

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு லண்டனில் இருந்து தினமும் 3:30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வந்துவிட்டு பின் 5:35 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் இன்று(மே 3) காலை 6 மணி நேரம் தாமதமாக, 9:30 மணி அளவில் வந்து சேரும் என்று விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் லண்டன் செல்லவிருந்த 314 பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

News May 4, 2024

பேருந்துகளில் பழுது நீக்கப்பட்டு வருகிறது!

image

சென்னை அரசு போக்குவரத்து பேருந்துகளின் பழுதுபடுதல் குறித்து வெளியாகும் செய்திகளுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், பழுதுகள், விபத்தில்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகளை வாங்க இயலவில்லை. தற்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 4, 2024

சென்னை: காதலனுக்காக தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

image

தண்டையார்பேட்டை பகுதியில் கணவரை பிரிந்த நந்தினி என்ற பெண், மணிகண்டன் என்பவரோடு 4 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், நேற்று(மே 3) அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நந்தினி தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் 70% காயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

மின்சார பேருந்து விரையில் இயக்கம்

image

சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

சிறுவன் நுரையீரலில் சிக்கிய பல்ப் அகற்றம்

image

சென்னை: போரூர் பகுதியைச் சேர்ந்த 5-வயது சிறுவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எல்.யி.டி பல்பு ஒன்றை தவறுதலாக விழுங்கிவிட்டார். இதனையடுத்து அச்சிறுவனக்கு தொடர்ந்து மூச்சுத் திணறலும், தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில், நுரையீரலில் பல்ப் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறிய பல்ப்பை அகற்றினர்.

News May 3, 2024

45 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்

image

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் அங்காளம்மன் கோயிலில் 45 அடி உயரத்தில் பிரமாண்ட முனீஸ்வரர் சிலைக்கு இன்று(மே 3) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பகுதி செயலாளர் அருள் தாசன், மாமன்ற உறுப்பினர்கள் தம்பையா சொக்கலிங்கம் உள்ளிட்ட 1,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

புழல் பகுதியில் நாளை மின்தடை

image

புழல் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(மே 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல் முழுவதும், சூரப்பட்டு முழுவதும், விநாயகபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

error: Content is protected !!