India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானகரம் அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் சென்னை, லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான திருநங்கை நிவேதா(20), பொதுத் தேர்வில் 600க்கு 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் ஒரே ஒரு திருநங்கை இவர் மட்டும்தான். இவர் தற்போது நீட் தேர்வு எழுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை, வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய் கடித்து படுகாயமடைந்த மாநகராட்சி பூங்கா காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி நேற்று(மே 5) கைது செய்யப்பட்ட நிலையில இன்று அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 94.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.20% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஏப்.6ம் தேதி, தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3.99 கோடியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலரை விசாரித்து வாக்குமூலம் பெற்ற்றனர். இதை தொடர்ந்து, தொழில்துறை பிரிவு மாநில து.தலைவர் கோவர்தனனை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சென்னை, ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவர் காவலாளி ரகு. இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகள் சுதக் ஷா உடன் ஒரு சிறு அறையில் வசித்து வருகிறார். நேற்று(மே 5) ரகு வெளியே சென்ற நிலையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சுதக் ஷாவை, பூங்கா அருகே வசிக்கக்கூடிய புகழேந்தி என்பவரின் 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே 6) சென்னை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை அதீத சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
தண்டையார்பேட்டை திமுக 38வது வட்ட துணைச் செயலாளர் சரஸ்வதி நேற்று முன்தினம்(மே 4) இரவு மர்ம நபர்களால் கத்தியால் வெட்டப்பட்டார். தொடர்ந்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை இன்று(மே 5) ஆர்.கே நகர் எம்.எல்.ஏ எபினேசர் மற்றும் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மா.பொறுப்பாளர் சேகர் ஆகியோர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டனர்.
சென்னை, அஞ்சல்தலை சேகரிப்பு மையம் சார்பில், மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மே 10, 11, 17, 18 மற்றும் 24, 25ம் தேதிகளில் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். பதிவுக் கட்டணம் ரூ.250. விவரங்களுக்கு 9444933467, 98848 32872, 99529 65458 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சச்சின் (25) என்ற கூலி தொழிலாளி 2 நாட்களுக்கு முன்பு வெப்ப அலை காரணமாக மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார். அவருடன் சேர்ந்து பணிபுரிந்த வேலு (35) என்பவர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.