Chennai

News June 21, 2024

சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆலந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்த முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில், 20க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்து கொள்ள உள்ளனர்.

News June 21, 2024

சென்னையில் காற்றுடன் கனமழை

image

கடந்த 2 நாள்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, நேற்றிரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. அடுத்த 48 மணி நேரத்துக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 20, 2024

சென்னையில் கனமழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(20.6.24) கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்தூர், கிண்டி, ஆலந்தூர் அடையாறு, உள்பட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

நாளை நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

INDIA கூட்டணி சார்பில் நாடுமுழுவதும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை (21.6.2024) மாலை 3.00 மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News June 20, 2024

சென்னையில் வழக்கத்தை விட அதிக மழை

image

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஜூன் 1 முதல் 19ஆம் தேதி வரை வழக்கத்தை விட 339 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் 36.6 மி.மீ மழை பதிவாகும், ஆனால் இந்தாண்டு 173.8 மி.மீ மழை பெய்துள்ளது.

News June 20, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தி.மலை சென்றடையும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து ஜூன்.22 அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் வழங்கல்

image

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (ம) வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பிலான 114 புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் 77 புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News June 20, 2024

ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சரத்குமார்

image

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்றுள்ளார். தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை, ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கி, கட்டாயம் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

News June 20, 2024

ஒரே வாரத்தில் 39 குற்றவாளிகள் கைது

image

சென்னையில் கடந்த ஒரு வரமாக, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்போன் பறிப்பு மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 6 சிறுவர்களும் உள்ளனர். அவர்களிடமிருந்து 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72,71,521 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News June 20, 2024

சென்னையில் இரவு நேரத்தில் மழை நீடிக்கும்

image

சென்னையில் இன்றும், நாளையும் (ஜூன் 20, 21) இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடப்பு ஜூன் மாதத்தில் மாட்டும் இதுவரை 173.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 339% அதிகம் ஆகும் (சராசரி- 39.6 மிமீ). வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தும் வருகிறது.

error: Content is protected !!