India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு இன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சில மின்சார ரயில்களின் சேவை நாளை(மே 12) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பயண திட்டங்களை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மசாஜ் என்ற பெயரில் ஆங்காங்கே பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்து வருகின்றனர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று(மே 10) சோதனை செய்தனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் துணை மின் நிலையத்தில் இன்று(மே 11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோயம்பேடு, கோயம்பேடு சந்தை, சீனிவாச நகர், பக்வத்சலம் நகர், மெட்டுகுளம், நியூ காலனி, திருவீதியம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை 11 முதல் நண்பகல் 12 வரை மின் விநோயோகம் இருக்காது.
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுடன் பதிவு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும். இணைய வழயில் ரூ.50 செலுத்தி செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினர்.
எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார்.
சென்னை, மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. 10 ஆம் வகுப்பு மாணவரான இவர் மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தேர்வு முடிவுகளை காண்பதற்காக இன்று(மே 10) காலை புறப்பட்ட ஜீவா, மதுரவாயல் பாலத்தின் கீழே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் தப்பிச்சென்ற நிலையில், லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 79.07% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.4 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் சென்னை மாவட்டம் 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.