Chennai

News May 15, 2024

செய்தியாளர்களை தள்ளி விட்ட தோனியின் பாதுகாவலர்

image

மே 18 – ம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இங்கு செல்வதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்களை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களை தோனியின் பாதுகாவலர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 15, 2024

வாசிங் மெஷினை கடை முன்பு எரிக்க முயற்சி

image

திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்து நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அண்ணா சாலையில் உள்ள பிரபல ஷோரூமில் வாசிங் மெஷினை 7 மாதத்திற்கு முன்பு வாங்கியுள்ளார். அது அடிக்கடி பழுதான நிலையில் வேறு வாசிங் மெஷினை கேட்டுள்ளார். சர்வீஸ் செய்து தருவதாக கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த கடை முன்பு வாசிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 15, 2024

கே.கே நகரில் சினிமா உதவி இயக்குநருக்கு வெட்டு

image

அசோக் நகர் 96 – வது தெருவை சேர்ந்தவர் தர்சன். சினிமா உதவி இயக்குநர். நேற்று மாலை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள ஒட்டல் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 15, 2024

கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

image

தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3வது முறையாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை அச்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

News May 15, 2024

பாஜகவுக்கு 79 இடம்தான் – செல்வப்பெருந்தகை

image

மக்களவை தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், “4 கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். ஒன்றிய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் இதை பாஜகவிடமே கூறிவிட்டனர். இதனால் மோடியும், அமித்ஷாவும் பயத்தில் இருக்கின்றனர். தேர்தலில் என்ன பிரச்சனையை ஏற்படுத்தலாம் என திட்டிமிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்

News May 15, 2024

சென்னையில் 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது ஆங்காங்கு கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகரில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

News May 15, 2024

சென்னை மாநகராட்சி இணையதளம் முடங்கியது

image

சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி கூறிய நிலையில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் உரிமம் பெற மாநகராட்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லபிராணிகளுக்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது

News May 15, 2024

சென்னை புனித மேரி தேவாலயம் சிறப்பு!

image

செயிண்ட் சார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது புனித மேரி தேவாலயம். இது இந்தியாவின் பழைமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த தேவாலயம் பிரபலமாக ‘கிழக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கட்டபட்ட இந்த தேவாலயம், 1680 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ரெவ். ரிச்சர்ட் போர்ட்மேன் என்பவரால் தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டது. கட்டிடத்தின் உள் பரிமாணங்கள் 86 அடி மற்றும் 56 அடி ஆகும்.

News May 15, 2024

NEW UPDATE: மெட்ரோ ரயில் சேவை சீரானது

image

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

News May 15, 2024

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி

image

சென்னை: அமைந்தகரை அய்யாவு காலணியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.‌ இந்நிலையில் இன்று வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த நவ்ஷாத் என்பவர் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!