India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பல்லாவரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனத்தின். பொருட்காட்சிப் பூங்கா செயல்பட்டு வந்தது. உரிய அனுமதி பெறவில்லை என கூறி பல்லாவரம் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பொருட்காட்சி உரிமையாளர் செந்தில் குமார், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளிடம் அனுமதி வாங்கியுள்ளோம் எனவும், வருவாய் துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சார்பில் பொது செயலாளர்கள் டி.செல்வம், வழக்கறிஞர்கள் பி.தாமோதரன், அருள் பெத்தையா , உள்ளிட்டோர் இன்று போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலை அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, மறைமுகமாக தமிழர்களை திருடர்கள் என கூறி தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தனர்.
சென்னை மற்றும் புறநகரில் ரேஷன் கடைகள், காலை 8.30-12.30 மணி வரையும், பிற்பகல் 3-7 மணி வரையும் செயல்படுகின்றன. இங்கு மற்ற மாவட்டங்களை விட பிற்பகல் நேரத்தில் கூடுதலாக 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் சில ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உணவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, ரேஷன் கடைகள் பிற்பகல் மூடும் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கல்யாணி. இவர் தனது மகனுடன் திருவண்ணாமலை சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை போர் நினைவுச் சின்னம் அருகே வந்து கொண்டு இருந்த போது காரின் இடதுபக்க முன் டயர் வெடித்தது. இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் பழைய பொருட்களை சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் திடீரென்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையினர் அசோக் நகர், கிண்டி ஆகிய பகுதி தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 15 ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 7 நாட்களில் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 47 வழக்குகள் பதிவு செய்து 51 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 235.181 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 4.86 கிலோ மாவா மற்றும் ரூ.28,850 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 142 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ஆகாசா ஏர் விமானம் மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிரங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அதனை தொடர்ந்து விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் நாளை புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமான வொண்டர்லா, சென்னையில் தன்னுடைய தீம் பார்க்கை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் இள்ளளூரில், 62 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த தீம் பார்க்கில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமையவுள்ளது. லண்டனுக்கு அடுத்தபடியாக பல அம்சங்கள் கொண்ட தீம் பார்க்காக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி கனியாமுத்தூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் தயார் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தோம். அந்த நேரத்தில் மகள் ஸ்ரீமதி குறித்தும் தன்னை பற்றியும் சவுக்கு சங்கர் கூட்டு சதி செய்து தெரிந்தே அவதூறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார்” என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.