India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று (ஜூன் 9) நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 247 மையங்களில் சுமார், 2.36 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். விஏஓ, வனக்காவலர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், சண்டிகர் விமான நிலையத்தில் CISF பெண் காவலரான குல்விந்தர் கவுர் என்பவர் மண்டி தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், CISF காவலர் குல்விந்தர் கவுர்-க்கு, பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் பரிசாக அறிவித்துள்ளது. மேலும், குல்விந்தர் கவுருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகிறது
சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 600 – க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் 1315 மாநகர பேருந்துகளின் கீழ் இருபுற பக்கவாட்டிலும் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில், மக்களை இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் சட்டம் 41ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனால், இனியும் இந்த நேரக் கட்டுப்பாடுகள் தொடரும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதிய நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ள டி.ஆர்.பாலு பெயரும் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி யோகலட்சுமி (19). இவர் தனது நண்பருடன் பைக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சென்ற போது, எதிரே வந்து பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த யோகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை: மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு (ம) புதுச்சேரியில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக – பாஜக கூட்டணி இருந்தால் 35 தொகுதிகளை வென்று இருக்கலாம் என எஸ்பி வேலுமணி பேசியது, அனுமானத்தின் அடிப்படையிலான அவரது சொந்த கருத்து. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. தோற்றுக் கொண்டே இருக்கும் RCB அணி போலதான் தமிழ்நாட்டில் பாஜக” என விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.