India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல யூடியூப்பர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கார் ஓட்டும் பொழுது மொபைலில் பேசியதாகவும் மேலும் இரட்டை வசனங்கள் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் யூடியூப் சேனலை முடக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை, பூக்கடை முத்துசாமி மேம்பாலம் அருகே பல்மருத்துவ கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பழைய கட்டடம் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு போதையில் ஒருவர் நிர்வாணமாக நின்றுள்ளார். இதுகுறித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலீசார் அந்தநபரை பிடித்து விசாரித்ததில் கொண்டித்தோப்பை சேர்ந்த முருகேசன் (48) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த துணை நடிகை ஒருவர் புகாரளித்தார். அதில்,“அம்பத்தூரை சேர்ந்த கார்த்திக் (39) என்னை தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பல்வேறு கோணங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தார். பின் அதனை சமுக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.1.20 லட்சம் பறித்ததோடு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்” என கூறியிருந்தார். இதையடுத்து கார்த்திக் கைது செய்யப்பட்டார்
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்த ஒரு துணை கமிஷனர் உட்பட 84 பேர் இன்ற ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்கள் அனைவருக்குமான பிரிவு உபச்சார விழா இன்று மாலை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மோடியின் தியானம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தவம் ஓர் ஆன்மீக கலை. அதை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் பிரதமர் மோடி குமரியை தேர்ந்தெடுத்ததற்கு பெருமை கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக தியானம் செய்வதை தேர்தல் விதிமீறல் என எதிரணியினர் கூறுவது காழ்ப்புணர்ச்சி. மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று (மே.30) புகாரளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வந்தேன். தமிழ்நாட்டில் இருந்து 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுகிறது” என்று கூறினார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு, ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பகுதியில் மே.31 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு தேதிகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பகுதியில் மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு தேதிகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளd. ஆகவே ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் வளசரவாக்கம் பகுதியில் சின்னத்திரை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,”ஆண் நடிகர் ஒருவரின் கார் ஓட்டுநர் முருகேஷ் என்பவர் 5 பேருடன் நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்”. இதையடுத்து முருகேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.