India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், சென்னை காவல் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள லேப்ரடார், ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த 7 நாய்களுக்கு ஸ்னோபி, ஸ்கூபி, மிக்கி, கூபி, பெட்டி, மினி, ஓடி என பெயரிட்டு சென்னை காவல் மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார்.
சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், விமான நிலையத்தில் குண்டுவெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட தயாராக விமானத்தில், 17வயது சிறுவன் ஒருவர் அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமான நிலைய போலீசார், சிறுவனை கீழே இறக்கி எச்சரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சிறுவன் செய்த இச்செயலால், விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறினாரான கௌதம், இன்று காலை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை, மர்ம நபர்கள் சிலர் திடீரென வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராமரிப்பு பணி காரணமாக, சென்டிரல் – அரக்கோணம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில், வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை (17ஆம் தேதி தவிர) கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரயில் நிலையங்களில் நிற்காது.
சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு மீனவ பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகனின் மனைவி மாலதி, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் ஷங்கர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும்
என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
சென்னையில் நாளை(12.6.2024) மின்பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அடையாறு, சோழிங்கநல்லூர், வியாசர்பாடி, தி.நகர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும், பிற்பகல் 2 மணிக்குள் பணி முடிவடைந்தால் மின்விநியோகம் வழங்கப்படும் என்றனர்.
சென்னை: ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு, ஊக்கத் தொகையாக ரூ.75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.