India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆர். நகர் தெருவைச் சேர்ந்த விஜயா (78) என்பவரை, கடந்த 19ஆ ம் தேதி முதல் காணவில்லை என அவரது மகள் லோகநாயகி போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவர, போலீசார் கொலை செய்த தம்பதியை கைது செய்தனர். அவர்கள் மூதாட்டியை கொலை செய்து ஆற்றில் வீசியதாக கூறப்பட்ட நிலையில், இன்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் கிழக்கு சாலை கால்வாயில் இருந்து சடலம் கைப்பற்றப்பட்டது.
தாம்பரம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூர் மின்பாதையில் நடைபெறும் பணி காரணமாக, எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை இடையே காலை 7:45 முதல் மாலை 7:45 வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. பயணிகள் அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆடி மாதத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ சந்தையில், நேற்றைவிட பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.2000, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140, சாக்லேட் ரோஜா ரூ.180, வாட மல்லி ரூ.150, ஜாதி மல்லி ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 28) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.38க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.75க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.45க்கும், தக்காளி ரூ.28 – ரூ.35க்கும், சவ் சவ் ரூ.25 – ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.20 – ரூ.25க்கும், முட்டைக்கோஸ் ரூ.25 – ரூ.28க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.25 – ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யா என்ற பெண், நேற்று முன்தினம் புற்றுநோயால் உயிரிழந்தார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, இ.பி.எஸ்., அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 13.58 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அதில், 2.79 லட்சம் கட்டடங்களில் வரி மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், 2.79 லட்சம் கட்டடங்களில் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறு மதிப்பீடு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் முடியும்போது கூடுதலாக, 120 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்பத்தூர், பொன்னியம்மன் நகர், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், ஜல்லடியான் பேட்டை, மேடவாக்கம், சாஸ்தா நகர், சித்தாலப்பாக்கம், வீர பத்ரன் நகர், அடையாறு, இந்திரா நகர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும்.
சென்னை எம்ஜிஆர் நகரில் நகைக்காக மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மூதாட்டி விஜயா என்பவரை பார்த்திபன் சங்கீதா தம்பதிகள் கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி இருச்சக்கர வாகனத்தில் எடுத்து சென்று கூவத்தில் வீசியுள்ளனர். மூதாட்டியை காணவில்லை என அவரது மகள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியை சோதனை செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.