India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை விட 4,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 51% வாக்குகளை இவரே பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி 9265 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி: தி.நகர் தொகுதிக்குட்பட்ட 6,8,11 ஆகிய மேஜைகளில் உள்ள இவிஎம் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடே எதிர்பார்க்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. இந்நிலையில் தென்சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்காமல் தாமதமாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
லயோலா கல்லூரியில் மத்திய சென்னை தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்திடில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது திமுக வேட்பாளர் தயாநிதி வேட்பாளர் முன்னணியில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் தயாநிதிமாறன், அதிமுக சார்பில் பார்த்தசாரதி, பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மொத்தம் 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், நாம் தமிழர் சார்பில் சு.தமிழ் செல்வி, பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
சென்னை
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், “வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற வேண்டும். பிரச்சனை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.