India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நட்சத்திர வேட்பாளர்களான பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வினோஜ் பி.செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளனர். தென் சென்னை வேட்பாளரான தமிழிசை 63,697 வாக்குகளும்(திமுக வேட்பாளர் – 1,01,648), மத்திய சென்னை வேட்பாளரான வினோஜ் 62,493 வாக்குகளும்(திமுக – 1,31,992) பெற்றுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் 12 மணி நிலவரப்படி சுமார் 62,316 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 35,537 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 73,996 வாக்குகளும், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 50,641 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் 68,507 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 3 ஆவது சுற்று முடிவில் 68,191 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 20,510 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 19,728 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி 10,609 வாக்குகள் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளார்.
தென் சென்னையில் 51,842 வாக்குகளை பெற்று 2 ஆம் இடத்தில் நீடிக்கிறார் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன். வட சென்னையில் திமுக – பாஜக வேட்பாளர்கள் இடையே பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இருக்கும் நிலையில், தென் சென்னையில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் தமிழிசை. இவர், மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மக்களை நம்பி ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்” என்றார். முதலில் இவர் பாஜக தான் வெற்றி பெறும் என பேசியிருந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்தர் பல்டி அடித்துள்ளார்.
மத்திய சென்னையில், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென் சென்னையில் வாக்கு எண்ணிக்கை தாமதமான நிலையில் தற்போது மத்திய சென்னையிலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2 ஆம் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வட சென்னையில் 13,000 வாக்குகளும்(சுற்று 3), தென் சென்னையில் 32,000(சுற்று 4) வாக்குகளும், மத்திய சென்னையில் 10,600 வாக்குகளும்(சுற்று 1) பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளது.
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி 39,000 வாக்குகளும்(சுற்று 3), தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் 54,000 வாக்குகளும்(சுற்று – 4), மத்திய சென்னை வேட்பாளர் 24,000 வாக்குகளும்(சுற்று 1) பெற்று முன்னிலையில் உள்ளனர்.
சென்னை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐ-பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி நகல் ஆகியவற்றை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.