India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டு உள்ளது. காவல் மாவட்டங்கள் வாரியாக இந்த தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார். இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் 74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகம் எதிரே சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு பிரம்மாண்ட விழா மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், போக்குவரத்து மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டு மற்றும் அருங்காட்சியகங்கள் துறைகளின் சார்பில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் சுற்றுலா துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்திர மோகன், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆன்மீகத்திற்கு எந்த விதத்திலும் திமுக அரசு தடையாக இல்லை என்றும், தமிழை முன்னெடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது வரை 1,920 கோயிலுக்கு குடமுழுக்கு முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டுக்குள் 2000 கோயிலுக்கு குடமுழுக்கு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சென்னை அந்திமழை இதழ் நிறுவனர் ந.இளங்கோவன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இளங்கோவன் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ‘கரன்சி காலனி’, ‘ஊர் கூடி இழுத்த தேர்’ ஆகிய நூல்களை எழுதி, மிகச்சிறந்த இலக்கிய பணியை ஆற்றி சென்றிருக்கும் இளங்கோவன் பிரிவு அச்சு ஊடகத்திற்கு பேரிழப்பு” என தெரிவித்துள்ளார்.
கடந்த 20220-ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், விருது வழங்கி கௌரவித்தார். சென்னை பெருநகர வடக்கு மண்டலம் பூக்கடை காவல் நிலையம், அமைந்தக்கரை காவல் நிலையம், அயனாவரம் காவல் நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம், கண்ணகி நகர் காவல் நிலையம் உள்ளிட்ட பத்து காவல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
சென்னையில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து 16 தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக தேடப்படும் சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரது கூட்டாளி ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹரிஹரனுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு தப்பி சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரையில் இருந்து கிருஷ்ணன் விமானம் மூலமாக தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு தப்பி சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.